நியூயார்க்கில் இந்த ஆண்டு நவம்பர் மாதம், சதுரங்க உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனுடன் மோதுவதற்குத் தகுதியான வீரரைத் தேர்வு செய்வதற்கான உலக கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டி மாஸ்கோவில் நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் டாபலோவுடன் வெள்ளை நிறக் காய்களுடன் மோதினார்.
டாபலோவ், ரய்லோபஸ் பெர்லின் டிபென்ஸ் முறையில் ஆனந்தை எதிர்கொண்டார். ஆனந்த் தொடக்கம் முதலே தனது சிப்பாய்களை முன்னெடுத்துச் செல்லும் நுட்பத்துடன் அதிரடியாகவே ஆடினார். ஆட்டத்தில் இருபதாவது நகர்த்தலின்போது டாபலோப் செய்த தவறு காரணமாக, ஆனந்தின் ஆட்டம் வலிமை பெற்றது.
டாபலோவ் தனது 20 நகர்த்தலின்போது 20….Bxf2! 21.Kxf2 Qh4, 22.g3 Ne4+ என்று ஆட்டத்தைத் தொடர்ந்திருந்தால், ஆனந்துக்குச் சிக்கல் இருந்திருக்கும். ஆனால் தனது 20-வது நகர்த்தலின்போது 20….Nb3? என்று விளையாடியதால், ஆனந்த் வெற்றிகரமாக ஆட்டத்தைத் தொடர முடிந்தது என்று அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் சாம்வேல் சாக்லண்ட் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்டத்தில், வழக்கமான தனது மேட்டிங் அச்சுறுத்தல் நுட்பத்தைப் பயன்படுத்தி, டாபலோவை ஆனந்த் நிலை குலைய வைத்தார். தனது யானையைத் தியாகம் செய்து, ஆனந்தின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க நினைத்த டாபலோவின் நகர்த்தல்கள் பயனற்றுப் போகவே, தனது 49-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இன்றைய இரண்டாவது சுற்றில், அர்மீனியா நாட்டைச் சார்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆரோனியனுடன், கருப்புக் காய்களுடன் ஆனந்த் மோதுகிறார்.
கேண்டிடேட்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் ஆனந்த் தொடங்கியுள்ளதால், இந்திய சதுரங்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனந்தும் டாபலோவும் மோதிய ஆட்டக் குறிப்புகளின் விவரம் பின்வருமாறு -
| 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. d3 Bc5 5. O-O d66. c3 O-O 7. Nbd2 Ne7 8. d4 exd4 9. cxd4 Bb610. Re1 Bg4 11. h3 Bh5 12. a4 a6 13. Bf1 Re8 14. a5Ba7 15. Qb3 Nc6 16. d5 Nd4 17. Nxd4 Bxd4 18. Qxb7Nd7 19. Nc4 Nc5 20. Qc6 Nb3 21. Rb1 Nxc122. Rbxc1 Rb8 23. Qxa6 Qh4 24. Rc2 Rxe4 25. Ne3Qd8 26. Qc4 Bg6 27. Bd3 Rf4 28. Bxg6 hxg6 29. g3Re4 30. a6 Qe8 31. Rce2 Bb6 32. Qd3 Ra8 33. Kg2Qa4 34. b3 Rd4 35. bxa4 Rxd3 36. Nc4 Rxa6 37. a5Bd4 38. Re8+ Kh7 39. R1e7 Rc3 40. Nd2 Rc2 41. Ne4f6 42. h4 Rxa5 43. Rf7 g5 44. h5 Rxf2+ 45. Nxf2 Ra246. Rff8 Rxf2+ 47. Kh3 g4+ 48. Kxg4 f5+ 49. Rxf5 1-0 |
- சி. சரவணன் (9976252800)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.