விளையாட்டு

மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்: சீன வீராங்கனை சாம்பியன்!

இவர் ஏற்கெனவே தனது 16-வது வயதில் 2010ல் மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். 2013 மகளிர் உலகக் கோப்பையையும் வென்றிருக்கும் இவர், 3ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

சி.சரவணன்

உக்ரைன் தலைநகர் லிவி நகரில் உலக செஸ் சங்கம் சார்பாக மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 1-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

உக்ரைன் நாட்டைச் சார்ந்த நடப்பு மகளிர் உலக சாம்பியன் மரியா முஸ்சக் மற்றும் சீனாவின் ஹியூ இபான் ஆகியோருக்கு இடையே இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

விதிமுறைகளின்படி, இருவருக்கும் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்படும். 5.5 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிப் புள்ளிகளை முதலில் எடுப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

முதல் 8 ஆட்டங்களின் முடிவில் 2-வது மற்றும் 6-வது போட்டிகளில் வெற்றி பெற்று 5க்கு 3 என்ற கணக்கில் சீனா வீராங்கனை முன்னிலை பெற்று விளங்கினார். நேற்று நடந்த 9-வது போட்டியில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய ஹியூ, மரியாவை தோற்கடித்தார். 46-வது நகர்த்தலின்போது a file சிப்பாயின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த முஸ்சக் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையிலேயே 6-3 என்கிற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றதால் நடப்பு சாம்பியனிடமிருந்து பட்டத்தைப் பறித்துவிட்டார் சீனாவின் ஹியூ.

இவர் ஏற்கெனவே தனது 16-வது வயதில் 2010ல் மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். 2013 மகளிர் உலகக் கோப்பையையும் வென்றிருக்கும் இவர், 3ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT