ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணே 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 3-ஆவது தோல்வியாகும்.
எனினும் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. டெல்லி அணி அதே மூன்றாவது இடத்திலும் புணே அணி அதே 6-வது இடத்திலும் நீடிக்கின்றன.
சுருக்கமான ஸ்கோர்
டெல்லி 162/7 (டுமினி 34, கருண் நாயர் 32, போலன்ட் 2வி/31, ரஜத் பாட்டியா 2வி/22
புணே 166/3 (ரஹானே 63*, கவாஜா 30, தாஹிர் 2வி/26)
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| கொல்கத்தா | 9 | 6 | 3 | 12 | +0.359 |
| குஜராத் | 9 | 6 | 3 | 12 | -0.236 |
| டெல்லி | 8 | 5 | 3 | 10 | +0.407 |
| மும்பை | 9 | 5 | 4 | 10 | -0.009 |
| ஹைதராபாத் | 7 | 4 | 3 | 8 | +0.060 |
| புணே | 9 | 3 | 6 | 6 | +0.181 |
| பெங்களூர் | 7 | 2 | 5 | 4 | -0.031 |
| பஞ்சாப் | 8 | 2 | 6 | 4 | -0.753 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.