இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் சுரேஷ் ரெய்னா. இதனால் நீண்டநாளாக உள்ள ஒரு சாதனை முறியவுள்ளது.
கடந்த 9 வருடங்களாக ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடிவரும் ஒரே வீரர் என்கிற சாதனை ரெய்னா வசம் உள்ளது. 2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னா இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிட்டதில்லை. தற்போது மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றுள்ளதால் இன்றைய பெங்களூருக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடுகிற வீரர் என்கிற பெருமையையும் ரெய்னா இழக்கிறார்.
இதுவரை அவர் 143 ஐபிஎல் போட்டிகளில் ஆடி அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்கிற சாதனையைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தோனியும் ரோஹித் சர்மாவும் உள்ளார்கள். இருவரும் தலா 140 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்களில் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்களில் டிவில்லியர்ஸுக்கு முதலிடம். அவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை - 114.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.