விளையாட்டு

பிசிசிஐ தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மே 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ தேர்தலுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பிகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

PTI

புது தில்லி: மே 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ தேர்தலுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பிகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சஷாங் மனோகர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செயலாளராக இருக்கும் அனுராக் தாக்குர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அனுராக் தாக்குர் மீது வழக்கு இருப்பதால், லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி அவர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. எனவே, தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தி பிகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சப்ரே மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் பிசிசிஐ தேர்தலுக்கு தடைவிதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

பிசிசிஐ தொடர்பான வழக்கை வேறு ஒரு அமர்வு விசாரித்து வருவதால்,  உச்ச நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மே 22 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அனுராக் தாக்குர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT