விளையாட்டு

புஜாரா, ஜடேஜா, சாஹா தேர்வு குறித்து வினோத் காம்ப்ளி கடும் விமரிசனம்!

எதன் அடிப்படையில், புஜாரா, சாஹா, ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்கள்? ரஞ்சிப் போட்டியை வென்ற மும்பை அணி வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.

எழில்

எதன் அடிப்படையில், புஜாரா, சாஹா, ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்கள்? ரஞ்சிப் போட்டியை வென்ற மும்பை அணி வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணியில் ஃபைஸ் ஃபஸல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஜூன் 11 முதல் 22 வரை ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்குர் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணிக்கு அஜிங்க்ய ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கடுமையாக விமரிசித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

தேர்வுக்குழுவினரே, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அணியை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் தான் உங்களைப் போன்றவர்களை ஜோக்கர்ஸ் என்று ஜிம்மி அமர்நாத் குறிப்பிட்டார்.

நான் இந்திய அணியில் இருந்தபோது மட்டுமல்ல அதற்குப் பிறகும் உள்ள இதுபோன்ற ஒரு தேர்வுமுறையால் நான் மிகவும் கடுப்பாகிறேன். தேர்வுக்குழுவினர் பலருடைய வாழ்க்கையை அழித்துள்ளார்கள்.

மும்பை அணி ரஞ்சி சாம்பியனாக உள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரோஹித் சர்மா, ரஹானே தவிர ஒரு மும்பை வீரர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், தரேவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? அவர்கள் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் உள்ளூர்ப் போட்டிகளில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளார்கள். நான் மும்பை வீரர்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர்களுடைய 6 மாத உழைப்பு வீணாகியுள்ளது.

தேர்வுக்குழுவினருக்கு ஒரு யோசனையும் கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு எந்தமாதிரியான அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்? புஜாரா, ஜடேஜா, சாஹா மற்றும் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள்! எதன் அடிப்படையில், புஜாரா, சாஹா, ஜடேஜா ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளார்கள்? புஜாராவும் சாஹாவும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. தேர்வுக்குழுவினரே, தயவு செய்து விளக்குங்கள் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT