முகப்பு
விளையாட்டு

பயிற்சியாளர் நியமனத்தில் தாமதம்! விராட் கோலி காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கடந்த ஜூன் 18-ந் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு விலகினார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஜூலை 26-ந் தேதி இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னர் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

Advertisement

எனவே, ரவி சாஸ்திரி, விரேந்திர சேவாக், க்ரெய்க் மெக்டெர்மாட், லான்ஸ் க்ளூஸ்னர், ராகேஷ் ஷர்மா, லால்சந்த் ராஜ்புட், பில் சிம்மன்ஸ், டாம் மூடி, தோட்ட கணேஷ், ரிச்சர்ட் பைபஸ், ஆகியோர் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.

அடுத்த தலைமைப் பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக சச்சின், கங்குலி, லக்ஷமண் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, சேவாக், பைபஸ், ரவி சாஸ்திரி, மூடி, ராஜ்புட் ஆகிய 5 பேருக்கான நேர்காணலை திங்கள்கிழமை நடத்தியது.

மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று மதியம் சுமார் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நேர்காணல் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சௌரவ் கங்குலி, கூறியதாவது:

நேர்காணல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துவிட்டன. இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒருவர் தான் பயிற்சியாளராக இருக்க முடியும். எனவே, இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கலந்து ஆலோசித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments