இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!
சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு இமாலய இலக்கு!
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற ஆர்சிபி அணி 251 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
பெங்களூரு சின்னசாமி திடலில் இன்றிரவு 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டபின், சிஎஸ்கேவின் கட்டளைக்குப் பணிந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி பவர்-ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 51 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய ஆர்சிபி பேட்ஸ்மென்களான பிலிப் சால்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் உதவியுடன் அந்த அணியால் முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் குவிக்க முடிந்தது.
பிற்பாதியில் 13-ஆவது ஓவரில் 23 ரன்கள், 17-ஆவது ஓவரில் 21 ரன்கள் விளாசிய ஆர்சிபி அணியின் ஆட்டத்திறனைப் பார்த்தபோது, அந்த அணியின் ஸ்கோர் நிச்சயம் 200-ஐ கடப்பது 200% சதவீதம் உறுதியானது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்கள் குவித்தது.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக நடுவரிசையில் களமிறங்கிய டிம் டேவிட் வெறும் 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 280 ஸ்ட்ரைக்-ரேட்டில் 70* ரன்கள் குவித்தார். அவர் எட்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வான வேடிக்கை நிகழ்த்தினார்.
அவருக்குப் பக்கபலமாக கேப்டன் ரஜத் படிதார் 19 பந்துகளில் 252 ஸ்ட்ரைக்-ரேட்டில் 48 ரன்கள் விளாசினார். தம் பங்குக்கு அவர் 6 சிக்ஸர்கள் விளாசினார். அவர்கள் இருவரும் சிக்ஸர் மழை பொழிந்து சென்னை அணி ரசிகர்களை தம்மால் முடிந்தளவுக்கு வெறுப்பேற்றினர்.
தேவ்தத் படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்களும் பிலிப் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து ஸ்கோர் போர்டுக்கு பங்களிப்பை வழங்கினர்.