விளையாட்டு

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்பைன் முகுருஸா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இறுதிப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார் கார்பைன் முகுருஸா.

ANI

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. 

இதில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவோகியாவின் மேக்தலீனா ரைபரிக்கோவாவை தோற்கடித்தார்.

இதையடுத்து விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸா 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் 23 நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT