விளையாட்டு

இரண்டே வரியில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த சேவாக்: இதிலும் அதிரடி

ENS

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு வெறும் 2 வரியில் சேவாக் விண்ணப்பித்திருப்பது பி.சி.சி.ஐ நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதிய பயிற்சியாளரான அனில் கும்ப்லேவின் ஒரு வருட ஒப்பந்த காலம் முடிவடையவுள்ள நிலையில் பலரும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சேவாக், தான் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்ததாகவும் மற்றும் தற்போதைய இந்திய வீரர்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும் மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னால் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் இவ்வாறு நிர்வாகத்தின் விதிமுறைகளை கேளிக்கையாக எடுத்துக்கொண்டு விண்ணப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் கும்பிலே மற்றும் கோலி இடையேயான கருத்துவேறுபாடு சரியாவதே இதற்குச் சுமுகமான தீர்வைத் தரும் என்றும் கருதப்படுகிறது.

பயிற்சியாளருக்கான பதவிக்கு சேவாக்கை தவிர சன்ரைசர்ஸர் ஹைதிராபாத் ஆணியின் பயிற்சியாளர் டாம், இங்கிலிஷ்மேன் ரிச்சார்ட், அஃப்கானிஸ்டான் பயிற்சியாளர் ராஜ்புட் மற்றும் டோடா கனேஷ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலியா அணி வீரர் கிரேக் அவர்களும் இதற்கு விண்ணப்பித்து இருந்தாலும் அவர் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவைத் தாண்டி அனுப்பியதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT