விளையாட்டு

தர்மசாலா டெஸ்ட்: 2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 248/6

தினமணி

தர்மசாலா டெஸ்டில் இந்தியா 2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

மூன்று டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டுமே விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது. இன்று 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.

இந்திய அணியின் ஸ்கோர் 10. 2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ராகுல், புஜாரா ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. லோகேஷ் ராகுல் 98 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் 3-ஆவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. புஜாரா 132 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை முடிந்தபின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது.

இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா கைக்குச் சென்றது. புஜாரா (57), கருண் நாயர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 49 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரகானே 46 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 7-ஆவது விக்கெட்டுக்கு சகாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ஆவது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இதனால் 2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சகா 10 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா ஆஸ்திரேலியாவை விட 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT