விளையாட்டு

பிரதமர் மோடிக்கு விராட் கோலி சவால்! ஏற்பாரா மோடி?

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோரின் உடற்தகுதி பிரச்சார சவாலை ஏற்ற விராட் கோலி பிரதமர் மோடி, தோனி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு உடற்தகுதி சவாலை விடுத்துள்ளார்.

DIN

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்களது உடற்தகுதி மந்திரத்தை விடியோவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட செவ்வாய்கிழமை வலியுறுத்தினார். இந்த உடற்தகுதி பிரச்சாரத்தை அவரிடம் இருந்தே தொடங்கிய ரத்தோர் 10 புஷ் அப் (Push Up) எடுக்கும் காட்சியை பதிவு செய்து டுவிட்டரில் பகிர்ந்தார். தான் உடற்தகுதியுடன் இருப்பதற்கு பிரதமர் மோடி தான் முன்மாதிரி என்று அவர் அந்த விடியோவுடன் இணைத்து பாராட்டியிருந்தார்.

பின்னர், இந்த உடற்தகுதி சவாலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை பங்கேற்க ரத்தோர் பரிந்துரை செய்தார். 

ரத்தோரின் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, பட் பிளாங்க் (Butt Plank) செய்வதை விடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கோலி இந்த சவாலை விடுத்துள்ளார். 

அதனால், இந்த சவாலை ஏற்று மோடி, தோனி மற்றும் அனுஷ்கா ஆகியோர் அடுத்தபடியாக விடியோ பதிவிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT