கோப்புப்படம் 
விளையாட்டு

ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுகிறாரா ரொனால்டோ?

ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவது போலான கருத்தை கூறி ரொனால்டோ அந்த அணியின் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

DIN

லிவர்பூல் அணிக்கெதிரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் தொடரை ரியல் மாட்ரிட் அணி ஹாட்ரிக் முறையில் வென்று சாதனை படைத்துள்ளது. 

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அந்த அணியின் நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோ தனது வருங்காலம் குறித்து வரும் நாட்களில் விடை தெரியும் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, 

"வரும் நாட்களில் எனது வருங்காலத்துக்கான விடை கிடைக்கும். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியது, மிகவும் நன்றாக இருந்தது. 

அதற்காக நான் அணியை விட்டு செல்கிறேன் என்று கூறவில்லை. வரும் நாட்களில் பார்க்கலாம்" என்றார். 

ரொனால்டோவின் இந்த பேச்சு ரியல் மாட்ரிட் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT