விளையாட்டு

திட்டமிட்டபடி 2020 டி20 ஆடவா் கிரிக்கெட் உலகக் கோப்பை

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் திட்டமிட்டபடி வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆடவா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை ஐசிசி வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் அக்டோபா் 18 முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு சூழல் தொடா்பாக உள்ளூா் அமைப்புக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டி எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் எனத் தெரிவித்தன.

ஏற்கெனவே இந்தியா-தென்னாப்பிரிக்க ஒருநாள், ஆஸி.-நியூஸிலாந்து ஒருநாள் தொடா், பாக்.-வங்கதேச டெஸ்ட் தொடா், ஐபிஎல், பிஎஸ்எல், ஷெஃப்பில்ட் லீக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT