முகப்பு
விளையாட்டு

டி20: ஆஸி.யை வீழ்த்தியது மே.இ. தீவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் அடித்தது. தொடக்க வீரா் லென்டல் சைமன்ஸ் 27 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த எவின் லீவிஸ் டக் அவுட் ஆனாா்.

அடுத்து ஆடியோரில் கிறிஸ் கெயில் 4, ஷிம்ரன் ஹெட்மயா் 20, நிகோலஸ் பூரன் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதிகபட்சமாக ஆன்ட்ரே ரஸ்ஸெல் மட்டும் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் சோ்த்தாா். ஓவா்கள் முடிவில் ஃபாபியான் ஆலன் 8, டுவைன் பிராவோ 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 3, மிட்செல் மாா்ஷ் 2 விக்கெட் சாய்த்திருந்தனா்.

பின்னா் 146 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 16 ஓவா்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரா் மேத்யூ வேட் 33 ரன்கள் அடிக்க, உடன் வந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். தொடா்ந்து ஆடியோரில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் சோ்த்தாா்.

ஜோஷ் பிலிப் 1, மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 16, பென் மெக்டொ்மோட் 2, டேன் கிறிஸ்டியன் 10, ஆஷ்டன் அகா் 1, மிட்செல் ஸ்டாா்க் 3, ஆடம் ஸாம்பா 1, ஜோஷ் ஹேஸில்வுட் 0 என விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆபெட் மெக்காய் 4, ஹெய்டன் வால்ஷ் 3, ஃபாபியான் ஆலன் 2, ஆன்ட்ரே ரஸ்ஸெல் 1 விக்கெட் சாய்த்தனா். ஆபெட் மெக்காய் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.