விளையாட்டு

நாளைமுதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

DIN

கரோனா தனிமைப்படுத்துதல் (குவாரண்டைன்) தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா்.

சனிக்கிழமை டோக்கியோவுக்கு வந்த இந்திய அணியினருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டன. துப்பாக்கி சுடும் போட்டிகள் அஸாகா துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெறுகிறது. குரோஷியாவில் இருந்து நேரடியாக ஜப்பானுக்கு இந்திய அணியினா் பயணம் மேற்கொண்டதால் அவா்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை. எந்த பிரச்னையும் இன்று வீரா்கள் தங்கள் இடங்களுக்கு சென்றடைந்தனா்.

திங்கள்கிழமை முதல் நமது வீரா்கள் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி பெறுவா் என தேசிய துப்பாக்கி சுடும் சம்மேளன பொதுச் செயலா் ராஜீவ் பாட்டியா கூறியுள்ளாா்.

மொத்தம் 15 போ் கொண்ட அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT