விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்தார் ஷிகர் தவான்

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான  ஷிகர் தவான் நேற்று இலங்கை உடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி  அணியை  வெற்றிபெறச் செய்தார்.இப்போட்டியில் அவர் அடித்த 86 ரன்களோடு அவர் விளையாடிய  ஒட்டுமொத்த சர்வேதசப்  போட்டிகளின்   மொத்த ரன்கள் 10000யைத் தாண்டியது. 

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான விரேந்தர்  சேவாக், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 10000 ரன்களைக்  கடந்திருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில்   ஐந்தாவது இடத்தையும் சர்வதேச  ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த இந்திய அணி வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ் தோனி , முகமது அசாருதீன் , ரோகித் சர்மா, யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக் ஆகியவர்களைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் 10 வது  இடத்தையும் பிடித்திருக்கிறார். 

இலங்கையுடன் மூன்று ஒருநாள் போட்டிகளும் மூன்று T 20  போட்டிகளும் கொண்ட தொடரில்   அணியைத் தலைமை ஏற்று நடத்துவது ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT