விளையாட்டு

கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் - பொறுப்பில் இருந்து விலகல்

DIN


தில்லி : கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நீடித்த மேமோல் ராக்கி தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அகில  இந்திய கால்பந்து கூட்டமைப்பு   " 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைமைப்  பயிற்சியாளராக நீடித்து பல வெற்றிகளைப் பெற்று தந்த அவருக்கு நன்றிகள். மேலும் அவருடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம் " எனத் தெரிவித்தனர்.

மேமோல் ராக்கி " கடந்த நான்கு வருடங்களில் அணியின் முன்னேற்றத்திற்காக பங்குபெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது எனவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும்  ஒடிசா அரசின் ஒத்துழைப்பிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் " எனக்  கூறினார்.
 
மேமோல் ராக்கியின் பயிற்சியின் கீழ் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தகுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றுவரை இந்திய அணி சென்றது அதுவே முதல் முறை. மேலும் 2019 ஆண்டு  தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் மகளிர்  கோப்பையை வென்று அசத்தியதுடன் நேபாளில் நடைபெற்ற தெற்கு ஆசியா போட்டிகளில் தங்கம் வென்றனர்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பெண்கள் ஆசிய கோப்பையில் இந்திய வீராங்கனைகள் வெல்வதற்கும்  வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT