விளையாட்டு

ராயுடு அதிரடி வீண்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி 

DIN

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆனால் மயங் அகர்வால் சோபிக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து ராஜபக்ச களமிறங்கினார். தவான், ராஜபக்ச இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 110 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜபக்ச 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களம்கண்ட லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 187 ரன்களை எடுத்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான உத்தப்பா 1 ரன் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர், ஷிவம் டுபே சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய ஜடேஜா, ராயுடுவுடன் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT