சஹால், சுந்தர் சுழலில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் 
விளையாட்டு

சஹால், சுந்தர் சுழலில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்...எளிதான இலக்கை நோக்கி இந்தியா

பொறுப்பாக ஆடிய ஹோல்டர், 71 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தபோது வேகபந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

DIN

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆயிரமாவது ஒருநாள் ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். சஹால், சுந்தர் சுழலில் சிக்கி 

இருப்பினும், பொறுப்பாக ஆடிய ஹோல்டர், 71 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தபோது வேகபந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, 176 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியை சுருட்டியது.

இந்திய அணி சார்பாக சஹால் நான்கு விக்கெட்டுகளையும் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT