ஷோயிப் அக்தர் 
விளையாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலிதான் சிறந்த வீரர்: ஷோயிப் அக்தர்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  

சமீப காலமாக விராட் கோலி பேட்டிங்கில் மோசமாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதேசமயத்தில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் கூட விராட் கோலிக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

விராட் கோலி பற்றி அதிகமான விமர்சனங்களை கேட்டேன். விராட் கோலி அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது இப்படி பரும் கருத்து சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலிதான் சிறந்த வீரர். 1-2 ஆண்டுகள் சரியாக ஆடாவிட்டால் என்ன? சதம் மட்டும்தான் அடிக்கவில்லையே தவிர ரன் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். 

மீடியாவில் விராட் கோலியை அசிங்கப்படுத்துவது சரியல்ல. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டுமென எப்படி ஒருவரால் சொல்ல முடியும்? கபில் தேவ் என்னுடைய மூத்த வீரர். அவரது கருத்தை மதிக்கிறேன். அவர் ஒரு லெஜண்ட். அவர் அப்படிப் பேசலாம். ஆனால் விராட் கோலி 70 சதம் அடித்துள்ள ஒரு தலைசிறந்த வீரர் என்பதை மறக்க வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT