விளையாட்டு

காலே டெஸ்ட்: இலங்கை 333 ரன்கள் முன்னிலை

காலேவில் நடைபெற்று வரும் இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

DIN

காலேவில் நடைபெற்று வரும் இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் பாபர் அசாம் மட்டுமே 119 ரன்களை எடுத்தார். அடுத்து ஆடிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் பெர்னாண்டோ 64 ரன்கள், குஷால் மெண்டிஸ் 76 ரன்கள் எடுத்தனர். சண்டிமால் 86 ரன்களுடனும் பிரபாத் ஜெயசூர்யா 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 3ஆம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை அணி 329 ரன்களுக்கு 9 விக்கெட்டிகளை இழந்துள்ளது. 

பாகிஸ்தான் சார்பில் மொஹம்மது நவாஸ் 5 விக்கெட்டுகளும், யஷிர் ஷா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஹாசன் அலி 1 விக்கெட்டும் எடுத்தார்.

மொத்தமாக இலங்கை அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT