கோப்புப் படம் 
விளையாட்டு

என்ஜினீயரிங் முதல் ஐபிஎல் வரை மனம் திறக்கும் தமிழக வீரர்

அறிவியல் மாணவன் முதல் ஐபிஎல் வீரர் வரை என தனது கிரிக்கெட் பாதை குறித்து இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் மனம் திறந்துள்ளார்.

DIN

அறிவியல் மாணவன் முதல் ஐபிஎல் வீரர் வரை என தனது கிரிக்கெட் பாதை குறித்து இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், குஜராத் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கிரிக்கெட் மீது கொண்ட அளவற்ற ஆர்வத்தினால் தனது பொறியியல் படிப்பைக் கைவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிதாகக் கூறினார். 

இந்த ஐபிஎல் போட்டியில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அவர் கடந்த பருவங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

சாய் கிஷோர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT