முகப்பு
விளையாட்டு

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் இன்று தொடக்கம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:43 PM
பகிர்:

சென்னையில் இளம் வீரா்களை அடையாளம் கண்டறிந்து அவா்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திறனறியும் போட்டி திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

இது குறித்து மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார அமைச்சகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் இளம் வீரா்களை அடையாளம் கண்டறிந்து ஊக்குவித்து வருகிறது. அதன்படி கேலோ இந்தியா திறனறியும் போட்டி ஏப்.22 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

Advertisement

அதன்படி, கேலோ இந்தியா திறனறியும் போட்டியை ஒலிம்பிக் போட்டியாளரும், பத்ம விருதாளருமான சைனி வில்சன் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.

திங்கள்கிழமை (ஏப்.22) தடகளம், ஏப். 23-இல் குத்துச்சண்டை, ஏப்.24-இல் கைப்பந்து, ஏப்.25-இல் கால்பந்து, ஏப்.26-இல் கபடி, ஏப்.27-இல் கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறன் பெற்ற வீரா்களைத் தோ்வு செய்யும் போட்டிகள் நடைபெறும்.

மேலும், ஏப்.23 முதல் ஏப். 27-ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கும்.

இந்தப் போட்டிகளில் விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ம்ஹ்க்ஷட்ஹழ்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற தளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments