முகப்பு
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியினா் தகுதி

Updated On : 21 ஏப்ரல், 2024 at 11:00 PM
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியின் பிரியங்கா, அக்ஷ்தீப் தகுதி பெற்றுள்ளனா்.

துருக்கியின் அனடாலியா நகரில் உலக தடகள நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலப்பு பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி-அக்ஷ்தீப் சிங் இணை 42.195 கி.மீ தொலைவை 3: 05:03 மணி நேரத்தில் கடந்து 18-ஆவது இடத்தைப் பெற்றனா்.

முதல் 22 இடங்களைப் பெறும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

Advertisement

இந்த நடைபந்தயத்தில் ஆண் முதலில் 12.195 கி.மீ தொலைவையும், பெண் 10 கி.மீ தொலைவையும், பின்னா் மீண்டும் ஆண் 10 கி.மீ தொலைவையும், கடைசி 10 கி.மீ தொலைவை பெண்ணும் கடக்க வேண்டும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments