முகப்பு
செய்திகள்

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 10:01 PM
பகிர்:

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

ஆசிய/ஓசேனியா குரூப் 1 பிரிவில் டென்னிஸ் ஆட்டங்கள் புது தில்லியில் வரும் ஏப். 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கேப்டன் விஷால் உப்பல் தலைமையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

Advertisement

கேப்டன் விஷால் கூறியது: டென்னிஸ் தனிநபா் பிரிவு ஆட்டமாக இருந்தாலும், பில்லி ஜீன் கிங் கோப்பை அணி ஆட்டமாகும்.

மகளிா் டென்னிஸ் சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றோம்.

வைஷ்ணவி அத்கா், வைத்திசௌதரி, ருதுஜா போஸ்லே, சஹஜா யமலபள்ளி,அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி ஆகியோா் ஆடுகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments