முகப்பு
கிரிக்கெட்

185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா..! தொடரை முழுமையாகக் (3-0) கைப்பற்றிய ஆஸி.!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியுற்ற இந்திய அணி குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 4:45 PM
இந்திய வீராங்கனை ஜெமிமா, ஆஸி. வீராங்கனை அலானா கிங். - படங்கள்: பிசிசிஐ வுமன், கிரிகெட் ஆஸி.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 4:06 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Updated On : 1 மார்ச், 2026 at 4:09 PM

டி20 தொடரை 2-1 என வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் 0-3 என தோல்வியுற்றுள்ளது.

Advertisement

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 409/7 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக, அலீஷா ஹீலி 158, பெத் மூனி 106* ரன்கள் எடுத்தார்கள்.

Updated On : 1 மார்ச், 2026 at 4:12 PM

அடுத்து பேட்டிங் விளையாடிய இந்திய அணி 45 ஓவர்களில் ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக, ஸ்நே ராணா 44, ஜெமிமா ரோட்ரிகஸ் 42 ரன்களும் எடுத்தார்கள்.

ஸ்மிருதி மந்தனா டக் அவுட்டாக, ஹர்மன்ப்ரீத் கௌர் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

summary

Alana King's amazing bowling: Australia win by 185 runs and win the ODI series 3-0.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.