முகப்பு
கிரிக்கெட்

2 வீராங்கனைகள் அரைசதம்..! ஆஸி.க்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிராக இந்திய மகளிரணியின் பேட்டிங் குறித்து...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:09 PM
இந்திய மகளிரணியினர். - பிசிசிஐ வுமன்
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:48 PM

ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 50 ஓவர்களில் 251/9 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் இரண்டு வீராங்கனைகள் (பிரதீகா ராவல், ஹர்மன்ப்ரீத் கௌர்) அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:52 PM

ஹோபர்ட் திடலில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்த்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, மற்றொரு பக்கம் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:55 PM

ஆஸ்திரேலிய அணி சார்பில் அலானா கிங், ஆஷ்லி கார்ட்னர், அன்னாபெல் சதர்லேண்டு தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

டி20 தொடரை வென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 0-1 என பின் தங்கியிருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால், ஒருநாள் தொடரை இழக்கும் அபாயம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

The Indian women's team scored 251/9 in 50 overs in the second ODI against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.