முகப்பு
கிரிக்கெட்

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

இந்திய மகளிருக்கு எதிராக வென்ற ஆஸ்திரேலிய மகளிரணி குறித்து...

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:57 PM
ஆஸ்திரேலிய வீராங்கனைகள். - படம்: ஐசிசி
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:44 PM

இந்திய மகளிருக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்ப்பர் பெத் மூனி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:50 PM

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி டி20 தொடரை வென்றது. அடுத்ததாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

பிரிஸ்பேனில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, 48.3 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 58, ஹர்மன்ப்ரீத் கௌர் 53 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லீ கார்ட்னர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:51 PM

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவர்களில் 217/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஆஸ்திரேலிய அணியில் அலீஷா ஹுலி 50, அன்னாபெல் சதர்லேண்டு 48 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியில் பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆஸி. அணியின் விக்கெட் கீப்ப்பர் பேட்டருமான பெத் மூனி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது வென்றார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.

summary

The Australian women's team won the first ODI cricket match against the Indian women by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.