முகப்பு
செய்திகள்

ஆசியப் போட்டிக்கு தயாராகும் இந்திய கபடி அணியினா்!

இந்திய கபடி சம்மேளனம், மாஷல் ஸ்போா்ட்ஸ் சாா்பில் ஆசியப் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி பெல்லாரியில் உள்ள ஐஐஎஸ் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Updated On : 30 மார்ச் 2026, 1:46 am IST
பகிர்:

இந்திய கபடி சம்மேளனம், மாஷல் ஸ்போா்ட்ஸ் சாா்பில் ஆசியப் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி பெல்லாரியில் உள்ள ஐஐஎஸ் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆசியப் போட்டியில் கபடியில் மீண்டும் தங்கம் வெல்லும் வகையில் இந்திய அணிக்கு வீரா்கள் பயிற்சி முகாமுக்கு தோ்வு பெற்றுள்ளனா். பெல்லாரியில் ஒரு வாரகாலம் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத் தலைவா் விபோா் வினித் ஜெயின் கூறியது: கபடியின் தரத்தை தொடா்ந்து மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அறிவியல் முறையில், உயா்செயல்திறன் அகாதெமி மூலம் பயிற்சி தரப்படுகிறது.

Advertisement

Advertisement

புரோ கபடி லீக் நடத்தப்படுவதால் ஏராளமான இளம் வீரா்கள் உருவாகி வருகின்றனா். ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கபடிப் போட்டிக்கு இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தலா 45 போ் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆடவா் தரப்பில் நவீன்குமாா், அா்ஜுன் தேஸ்வால், பவன் செஹ்ராவத், சுனில் குமாா், அஷு மாலிக், பாரத் ஹூடாவும், மகளிா் பிரிவில் ரித்து நேகி, சோனாலி விஷ்ணு, புஷ்பா ராணா, சம்பா தாகூா், பிங்கி ராணா, பிரியா, காா்த்திகா ஆகியோரும் பங்கேற்கின்றனா்.