விளையாட்டு

இது மிகப் பெரிய சாதனை: பும்ராவைப் புகழ்ந்த அஸ்வின்!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளது மிகப் பெரிய சாதனை என இந்திய அணியின் சுழற்ந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பும்ராவின் அபார பந்துவீச்சினால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் பும்ரா முதலிடம் பிடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதனையடுத்து, பும்ராவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளது மிகப் பெரிய சாதனை என இந்திய அணியின் சுழற்ந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: உண்மையில் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சார்பில் பும்ரா 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தினார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் முதலிடம் பிடித்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அவரது பந்துவீச்சுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவர் செய்துள்ளது மிகப்பெரிய சாதனை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT