விளையாட்டு

2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 220 ரன்கள் குவிப்பு!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று (பிப்ரவரி 13) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் நீல் பிராண்ட் (25 ரன்கள்), ரேனார்டு வான் டோண்டர் (32 ரன்கள்), ஜுபையர் ஹம்சா (20 ரன்கள்), டேவிட் பெடிங்ஹம் (39 ரன்கள் ) எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி, வில்லியம், நீல் வாக்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ருவான் டி ஸ்வார்ட் 55 ரன்களுடனும், ஷான் வான் பெர்க் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT