விளையாட்டு

கிரிக்கெட்டை பல விதங்களில் மாற்றியவர் பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து வீரர்

DIN

கிரிக்கெட் போட்டியை பல விதங்களில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளதாக அந்த அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் போட்டியை பல விதங்களில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளதாக அந்த அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட் விளையாட்டை பல விதங்களில் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளார். அணிக்குத் தேவையானபோது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல முறை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது சாதனைகள் நம்ப முடியாததாக உள்ளது. ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப் பெரிய சாதனை. அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 6,251ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT