மொகமது நபி (கோப்புப் படம்) 
விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த 39 வயது ஆப்கன் வீரர்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 39 வயது முகமது நபி ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 39 வயது முகமது நபி ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

5 வருடங்களுக்கு மேலாக ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வந்தவர் வங்கதேச வீரர் ஷகிப் ஹல் ஹாசன். தற்போது இவரை பின்னுக்கு தள்ளி 39 வயதான ஆப்கன் வீரர் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு கடந்தாண்டிலிருந்து ஷகிப் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். அவரது கண் பார்வைக் குறைபாடு காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நபி 136 ரன்கள் அடித்து அசத்தினார். நம்பர் 7-இல் களமிறங்கி சதமடித்த இவரது பேட்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பௌலிங்கிலும் அசத்துகிறார் நபி. ஐசிசியின் ஒருநாள் பௌலிங் தரவரிசையில் 7வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT