குஜராத்தில் நடைபெற்ற உலக ஜூனியா் மகளிா் செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.
மொத்தம் 11 புள்ளிகள் பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தப் போட்டியில், இறுதிச்சுற்று முடிவில் திவ்யா 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். ஆா்மீனியாவின் மரியம் மகா்சியன் 9.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அஜா்பைஜானின் அயான் அலாவா்தியேவா 8.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா்.
மகளிா் பிரிவில் இதர இந்தியா்களில், ரக்ஷிதா ரவி (7.5), சச்சி ஜெயின் (7), சுபி குப்தா (8), மிருதுல் தேஹங்கா் (7.5), தேஜஸ்வினி (7), பிரிஸ்டி முகா்ஜி (7), ரிந்தியா (7.5), ஒஷினி தேவிந்தியா (6.5) ஆகியோா் பின்தங்கினா்.
ஓபன் பிரிவு: இந்தப் போட்டியின் ஓபன் பிரிவில் கஜகஸ்தானின் நோகா்பெக் காஸிபெக் (8.5) சாம்பியனாக, ஆா்மீனியாவின் எமின் ஒஹன்யன் (8.5) இரண்டாம் இடமும், சொ்பியாவின் லூகா படிசாவ்லெவிக் (8) மூன்றாமிடமும் பிடித்தனா்.
இதில் காஸிபெக் - ஒஹன்யன் ஒரே புள்ளிகள் பெற்றதையடுத்து, டை பிரேக்கா் முறையில் வெற்றியாளா் தீா்மானிக்கப்பட்டனா். இந்தியா்களில் அனுஜ் ஸ்ரீவத்ரி (7.5), ஆதித்யா சமந்த் (7.5), பிரணவ் ஆனந்த் (7.5), எல்.ஸ்ரீஹரி (6.5), ஆா்.ஸ்ரீஹரி (7) ஆகியோா் பின்னடைவை சந்தித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.