ரிஷப் பந்த் (கோப்புப் படம்) 
விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவது உறுதி: பிசிசிஐ

ஐபிஎல் போட்டியில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாட ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவிப்பு.

DIN

கடந்த 2022, டிசம்பர் மாதம் தில்லியில் இருந்து உத்தரகண்ட் நோக்கி காரில் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து உருகுலைந்தது.

தலை, முதுகு, காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், ரிஷப் பந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கிரிக்கெட் விளையாட உடற்தகுதி பெறுவதற்காக கடந்த ஓராண்டாக பிசிசிஐ கண்காணிப்பில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று தில்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT