விளையாட்டு

ஐசிசி தரவரிசை: முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார் ரிஷப் பண்ட்!

இந்திய வீரர் ரிஷப் பண்ட் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கார் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் 128 பந்துகளில் 109 ரன்கள் திரட்டி அணியின் வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை அளித்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய ளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திலும், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்து வீரர் டேரி மிட்செல் 3-ஆம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 4-ஆம் இடத்திலும் உள்ளனர். சுப்மான் கில் 5 இடங்கள் முன்னேறி 14-ஆம் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் அஸ்வின் முதல் இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 2-ஆம் இடத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT