படம் | ஐஏஎன்எஸ்
விளையாட்டு

காலிறுதி: முதல் கேமில் அர்ஜுன் டிரா

தினமணி செய்திச் சேவை

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முதல் கேமில் சீனாவின் வெய் யியுடன் திங்கள்கிழமை டிரா செய்தார்.

கோவாவில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி, தற்போது காலிறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 206 போட்டியாளர்கள் இதில் பங்கேற்ற நிலையில், 5 சுற்றுகள் நிறைவில் 198 பேர் வெளியேறிவிட்டனர். 8 பேர் காலிறுதிக்கு வந்துள்ளனர்.

போட்டியில் மொத்தமாக 24 இந்தியர்கள் களம் கண்டிருந்ததில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், மகளிர் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் உள்பட 23 பேர் தோல்வி கண்டு வெளியேறினர். இந்தியாவின் ஒரே போட்டியாளராக அர்ஜுன் எரிகைசி மட்டும் தற்போது களத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய காலிறுதிச்சுற்றில் அர்ஜுன் கருப்பு நிற காய்களோடு வெய் யியுடன் விளையாட, 31 நகர்த்தல் முடிவில் இருவரும் டிரா (0.5}0.5) செய்துகொள்ள ஒப்புக் கொண்டனர். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் } மெக்ஸிகோவின் ஜோஸ் மார்டினெஸ், அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்ட் } ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோ ஆகியோர் மோதலும் டிராவில் முடிந்தது.

காலிறுதியின் முதல் வெற்றியாக, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவ் } ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் டான்சென்கோவை வீழ்த்தினார் (1}0). இதனால், 2}ஆவது கேமை டிரா செய்தாலேயே அவர் அரையிறுதிக்கு முன்னேறிடுவார். அர்ஜுன் உள்பட இவர்கள் அனைவரும் களம் காணும் காலிறுதியின் 2}ஆவது கேம், செவ்வாய்க்கிழமை (நவ. 18) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT