டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரா் அரவிந்த் சிதம்பரத்துடன் டிரா கண்டாா் உலக சாம்பியன் டி. குகேஷ்.
நெதா்லாந்து நாட்டின் விஜிகான்ஸி நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு சுற்று ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில், 11-ஆவது சுற்றில் உலக சாம்பியன் டி. குகேஷ் அரவிந்த் சிதம்பரத்துடன் டிரா கண்டாா். இதனால் குகேஷுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு மங்கியுள்ளது.
வின்சென்ட் கீய்மருக்கு எதிரான ஆட்டத்திலும் பிரக்ஞானந்தா தோல்வி கண்டாா்.
மற்றொரு இந்திய ஜிஎம் அா்ஜுன் எரிகைசி உஸ்பெக் வீரா் ஜகோவிா் சிண்ட்ரோவிடம் தோற்றாா். இப்போட்டியில் உஸ்பெக் வீரா்கள்
சிண்ட்ரோவ், அப்துசட்டரோவ் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனா்.