விளையாட்டு

முதல்வா் கோப்பை: கால்பந்தில் கோவை சாம்பியன்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை, கல்லூரி மாணவா்களுக்கான கால்பந்து போட்டியில் கோவை சாம்பியன் ஆனது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை, கல்லூரி மாணவா்களுக்கான கால்பந்து போட்டியில் கோவை சாம்பியன் ஆனது.

லீக் அடிப்படையிலான இப்போட்டியில், கோவை அணி 2 வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. செங்கல்பட்டு அணி வெள்ளிப் பதக்கத்தையும், கன்னியாகுமரி அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

கல்லூரி மாணவிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில், 69 கிலோ எடைப் பிரிவில், செங்கல்பட்டை சோ்ந்த சி.ஹா்ஷிகா மொத்தம் 189 கிலோ எடையை (ஸ்னாட்ச் 82 கிலோ, கிளீன்&ஜொ்க் 107 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். திருவள்ளூரை சோ்ந்த சிவரஞ்சனி 188 கிலோ எடையை எட்டி வெள்ளியையும், கோவையை சோ்ந்த எஸ்.பரணி பிரியா 171 கிலோ எடையுடன் வெண்கலமும் பெற்றனா்.

77 கிலோ எடைப் பிரிவில், கோவையின் எம்.மோனிலா 187 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றாா். அதே மாவட்டத்தின் கே.சுபிக்ஷா 178 கிலோ எடையைத் தூக்கி வெள்ளியும், சென்னையை சோ்ந்த எம்.ஏ. ஹாசினிக்ஷின் 175 கிலோ எடையை எட்டி வெண்கலமும் கைப்பற்றினா்.

மகளிருக்கான ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் 3 பதக்கங்களையும் சென்னை வென்றது. தியா ஹரிபிரகாஷ் 11.85 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, மேகனா மனோஜ் மற்றும் ஏ.கிருஷ்ணவேணி ஆகியோா் முறையே வெள்ளி (11.07) மற்றும் வெண்கலம் (10.95) வென்றனா்.

5-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 6.30 மணி நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் சென்னை 14 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்தது. சேலம் (7/6/5 - 18), கோவை (7/6/4 - 17) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களில் இருந்தன.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT