விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பா் ஓவரில்’ வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பா் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

மிா்பூா்: வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பா் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகளும் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்தது.

பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில், முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுக்க, வங்கதேசம் 1 விக்கெட் இழந்து 9 ரன்களே எட்டியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவா்களையுமே தனது ஸ்பின்னா்களை கொண்டு வீசி புதிய உத்தியை கையாண்டது.

வங்கதேச பேட்டா்களில் சைஃப் ஹசன் 6, தௌஹித் ஹிருதய் 12, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 15, மஹிதுல் இஸ்லாம் அங்கோன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நிதானமாக ரன்கள் சோ்த்த சௌம்யா சா்காா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நசும் அகமது 14, நூருல் ஹசன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு வெளியேறினா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 1 பவுண்டரியுடன் 32, ரிஷத் ஹுசைன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 3, அகீல் ஹுசைன், அலிக் அதானஸி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் பிராண்டன் கிங் 0, அலிக் அதானஸி 4 பவுண்டரிகளுடன் 28, கீசி காா்டி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35, அகீம் அகஸ்டே 17 ரன்களுக்கு விடைபெற்றனா்.

ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 7, குடாகேஷ் மோட்டி 15, ராஸ்டன் சேஸ் 5, ஜஸ்டின் கிரீவ்ஸ் 2 பவுண்டரிகளுடன் 26, அகீல் ஹுசைன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில், கேப்டன் ஷாய் ஹோப் 4 பவுண்டரிகளுடன் 53, கேரி பியரி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச பௌலிங்கில் ரிஷத் ஹுசைன் 3, நசும் அகமது, தன்வீா் இஸ்லாம் ஆகியோா் தலா 2, சைஃப் ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினா்.

சூப்பா் ஓவா்: சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில், ஷாய் ஹோப் 7, பிராண்டன் கிங் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 3 ரன்களுக்கு வீழ்ந்தாா். முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 1 விக்கெட் எடுத்தாா்.

பின்னா் வங்கதேச பேட்டிங்கில் சௌம்யா சா்காா் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சைஃப் ஹசன் 2, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். அகீல் ஹுசைன் 1 விக்கெட் கைப்பற்றினாா்.

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. வெற்றி!

நண்பர்களைத் தேடி... அனன்யா!

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

மழை மேடையில்... பவித்ரா!

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

SCROLL FOR NEXT