விளையாட்டு

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

தினமணி செய்திச் சேவை

பெய்டாய்ஹே: சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில், இரு பிரிவுகளில் தங்கம் வென்று இந்திய போட்டியாளா்கள் வரலாறு படைத்தனா்.

சீனியா் ஆடவருக்கான 1,000 மீட்டா் ஸ்பிரின்ட் பந்தயத்தில், இந்தியாவின் வி.ஆனந்த்குமாா் 1 நிமிஷம், 24.924 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று அவா் சாதனை படைத்தாா்.

இத்தாலியின் டுசியோ மாா்சிலி வெள்ளியும் (1:25.145’), பராகுவேயின் ஜூலியோ மிரெனா வெண்கலமும் (1:25.466’) வென்றனா். ஆனந்த்குமாா், சீனியா் ஆடவா் 500 மீ ஸ்பிரின்டில் 42.892 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜூனியா் ஆடவா் 1,000 மீட்டா் ஸ்பிரின்டில் இந்தியாவின் கிரிஷ் சா்மா பந்தய இலக்கை 1 நிமிஷம், 29.296 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடிக்க, சீனாவின் லு டெங்போ வெள்ளி (1:30.243’) வென்றாா். சிலியின் கேப்ரியல் ரெயெஸ் வெண்கலம் (2:30.453’) பெற்றாா்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT