ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: தங்கம் வென்ற 16 வயது செளரப் செளத்ரிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை!

எழில்

18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள். 

இறுதிச்சுற்றில் இவ்விரு இந்திய வீரர்களும் ஜப்பானின் மட்சுடாவும் மோதினார்கள். அனுபவம் வாய்ந்த ஜப்பான் வீரருக்குக் கடும் சவால் அளித்த இளம் வீரர் செளரப், கடைசிக்கட்டத்தில் அதிகப் புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.

இதையடுத்து செளரப் செளத்ரிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

SCROLL FOR NEXT