ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி பாட்மிண்டன்: முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த், பிரணாய் வெளியேற்றம்

ஆசியப் போட்டி பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்எஸ் பிரணாய் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

DIN

ஆசியப் போட்டி பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்எஸ் பிரணாய் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர். 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஹாங்காங் வீரர் விங் கி வின்சென்டை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார். இதில், ஸ்ரீகாந்த் 21-23, 19-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதன்மூலம், அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். 

இவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ஹெச் எஸ் பிரணாய் தாய்லாந்து வீரர் காந்தஃபோன் வாங்சரோயெனை எதிர்கொண்டார். இவரும், 12-21, 21-15 மற்றும் 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

இதனால், ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் இந்த பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT