கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைப் போட்டியின் போது சச்சின் - சுந்தர் பிச்சை சந்திப்பு!

கடந்த ஞாயிறன்று இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது சச்சின் - சுந்தர் பிச்சை சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

எழில்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது சச்சின் - சுந்தர் பிச்சை சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து பள்ளிக் கல்வியை முடித்த சுந்தர் பிச்சை, மேற்கு வங்கத்தின் கராக்பூரில் உள்ள இந்திய தொழில்கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு, ஜெர்மனியில் உள்ள ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பொறியியல் பயின்ற அவர், அமெரிக்காவிலுள்ள வார்ட்டன் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது சச்சின் டெண்டுல்கர் - சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த நிகழ்வின் புகைப்படத்தை சச்சின் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT