முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை அரையிறுதி: நியூஸிலாந்து முதலில் பேட்டிங்!

கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:29 AM
பகிர்:

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்து.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.