முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

விஜய் சங்கருக்குக் காயம்: இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்!

ந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர், வலைப்பயிற்சியின்போது காயமடைந்துள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

உலகக் கோப்பையையொட்டி, இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர், வலைப்பயிற்சியின்போது காயமடைந்துள்ளார். 

பேட்டிங் செய்தபோது அவருடைய வலக்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஜாதவ், நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இடம்பெற மாட்டார் எனத் தெரிகிறது. இந்நிலையில் விஜய் சங்கரும் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் 4-ம் நிலை வீரராக கேஎல் ராகுல் விளையாடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.