கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

2-வது பயிற்சி ஆட்டம்: சரிவைத் தடுத்து நிறுத்திய கே.எல். ராகுல்!

இந்திய அணி, 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது....

எழில்

முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வி ஏற்பட்ட நிலையில் வங்கதேச அணியுடன் 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது இந்திய அணி. டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை அடையாத கெதர் ஜாதவ் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. விஜய் சங்கர் விளையாடுவதாக கோலி அறிவித்துள்ளார். 

1 ரன் எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார் தவன். அவருடைய விக்கெட்டை முஸ்தாஃபிசர் ரஹ்மான் வீழ்த்தினார். பிறகு ரோஹித் சர்மாவும் கோலியும் கூட்டணி அமைத்து சிறிது நேரம் விளையாடினார்கள். 42 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் எடுத்த நிலையில் ருபெல் ஹுசைன் பந்துவீச்சில் போல்ட் ஆனார் ரோஹித் சர்மா. பந்துகளை வீணடிக்காமல் ரன்கள் எடுத்த விராட் கோலி, 47 ரன்களில் சைஃபுதீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5-வதாகக் களமிறங்கிய விஜய் சங்கர், 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 102 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்தது இந்திய அணி.

இந்திய அணி, 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ராகுல் 52, தோனி 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT