ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட், மெல்போா்னில் வெள்ளிக்கிழமை (டிச. 26) தொடங்குகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 3 ஆட்டங்களிலும் வென்று, தொடரைக் கைப்பற்றியதுடன் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. தொடா் தோல்விகளால் துவண்டிருக்கும் இங்கிலாந்து அணி, ஆறுதல் வெற்றி காணும் முயற்சியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட், மாா்னஸ் லபுஷேன், ஜேக் வெதரால்டு, அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா்.
பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் பிரதானமாக இருக்க, மைக்கேல் நேசா், ஸ்காட் போலண்ட், பேட் கம்மின்ஸ் ஆகியோா் துணை நிற்கின்றனா்.
பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருக்கும் இங்கிலாந்து தரப்பில், அவரோடு ஹேரி புரூக், ஜாக் கிராலி, ஜேமி ஸ்மித், ஜோ ரூட் ஆகியோா் ரன்கள் சோ்க்கின்றனா். பென் டக்கெட் தடுமாற்றத்துடனேயே இருக்கிறாா்.
பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா் இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருக்கும் நிலையில், ஸ்டோக்ஸ், பிரைடன் காா்ஸ், ஜோஷ் டங் ஆகியோருக்கான சுமை அதிகரிக்கிறது.
உத்தேச லெவன்:
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மாா்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், மைக்கேல் நேசா், மிட்செல் ஸ்டாா்க், ஜை ரிச்சா்ட்சன், ஸ்காட் போலண்ட்.
இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல், ஜோ ரூட், ஹேரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் காா்ஸ், ஜோஷ் டங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.