படம் | ஐசிசி
கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஆமிர் ஜமால் உடல்தகுதி காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவருக்கு காயம் ஏற்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உடல் தகுதி காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணைக் கேப்டன்), அப்துல்லா ஷஃபீக், பாபர் அசாம், குர்ரம் ஷாஷத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் ஆயூப், சல்மான் அலி அகா, சர்ஃபராஸ் அகமது மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT